இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் விஷேட நேரடி_ஒலிபரப்பு 28-09-2023 தினம் *1.00pm - 5.00pm வரை* எமது கெகுணகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து ஒலிபரப்பப்பட்டது. இது SLBC முஸ்லிம் சேவை உருவாக்கப்பட்ட50வருட கால வரலாற்றில் பாடசாலை ஒன்றிலிருந்து நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும். நிகழ்வில் முஸ்லிம் சேவை பணிப்பாளர் உட்பட ஏனைய சேவைகள் மற்றும் பிராந்திய சேவைகளின் (தென்றல் FM, பிறை FM), பணிப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நாட்டின் பிரபல அறிவிப்பாளர்கள், புகழ் பூத்த பழம்பெரும் மூத்த கலைஞர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் கவிஞ்சர்கள், ஊடகவியாளர்கள் என நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் எமது #பிரதேசத்தின்_ஊடகவியாளர்கள், கலைஞர்கள், கவிஞ்சர்கள் என பலருக்கும் மேடையேற சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.இவ் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு முதன்முதல் பாடசாலையாக எமது KNSஐ தெரிவு செய்தமைக்காக SLBC முஸ்விம் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.







