கெகுணகொல்ல தேசியபாடசாலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் கெகுணகொல்ல எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் தேசியப்பாடசாலை ஆகும்.
தமிழ் பேசும் மக்களுக்கென்று கல்விக்கூடமொன்று இல்லாமையால் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த கெகுண கொல்லையில் ஒரு திண்ணைப்பள்ளியை ஆரம்பிப்பதற்காக கல்விக்கூடமொன்றை நடாத்துவதற்கு ஒரு சிறு கட்டடத்தை வழங்கிய மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் காதர் முகட்டியார்ஆகும் .அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராமத்தினர் ஒரு திண்ணைப்பள்ளியை காலம் சென்ற ஜனாப்.ப.இ. ஆதம்பிள்ளையை முதல் மாணவனாகவும், ஜனாப். சேமன்கனி மரைக்காயரை ஆசிரியராகவும் கொண்டு 1920ம் ஆண்டு ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று சுமார் (2023 இல்) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட 1AB பாடசாலையாகத் திகழ்கின்றது.







