அதிபர் செய்தி
Mr.A.M.M.ரிசாத்
நூற்றாண்டு கால வரலாற்றையும்,பெருமையையும் உடைய எண்டிசையிலும் புகழ் பூத்து மணம் பரப்பும் பல்வேறு கல்விமான்களையும் ஒழுக்க விழுமிய சீலர்களையும் உருவாக்கிய கெகுணுகொல்ல தேசிய பாடசாலையின் அதிபர் என்ற வகையில் பாடசாலையின் வலைப்பக்கத்திற்கான செய்தியை வெளியிடுவதில் மிகவும் புலகாங்கிதமடைகிறேன். மட்டுமின்றி முன்னைய அதிபர்கள், ஆசிரியர்களின் அளப்பரிய சேவைகளையும், பாடசாலையை முன்னேற்றுவதற்கான அவர்களின் ஈடுபாட்டையும் இங்கு நினைவு கூர்கிறேன்.
21ம் நூற்றாண்டை அடியொற்றிய வகையில் இவ்வலைத்தளமானது பாடசாலையின் கல்விசார் விடயங்களையும் , கண்டுபிடிப்புகளையும்,திறமைகளையும், அடைவுகளையும் வெளிக்காட்டும் என்பதில் உறுதிகொள்கிறேன். எனவே எனதுமனமார்ந்தநன்றிகளை தெரிவித்து கொள்வதோடு கெகுணுகொல்ல தேசிய பாடசாலையானது புதிய மாற்றங்களுடன் புதிய தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்க இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
Mr.A.M.M.ரிசாத்
அதிபர்
கெகுணுகொல்ல தேசிய பாடசாலை.







