இணையேதுமில்லா இறைவா
இனிதாய் உன் நாமம் கூறி
துணையேதுமில்லா துணைவா
துய்தாய்த் துவங்குகின்றோம்.
கருணை நிறைந்த வடிவே
கலை ஞானம் ஓங்கச் செய்வாய்
நிறைவான ஜோதியோனே
முறையான கல்வி தருவாய்
அஞ்ஞானம் ஆட்சி செய்யும்
அறியாமையை அகற்ற
விஞ்ஞான உலகை அடைவோம்
மெய்ஞ்ஞானம் பரப்பி மகிழ்வோம்.
வடமேல் மாகாணம் ஈன்ற
வரலாறு கண்டு வந்த
கெகுணகொல்ல பதியில்
ஒரு நூறு வருடம் சென்ற
தேசங்கள் போற்றும் வண்ணம்
தேசிய பாடநெறிகள்
தேனாய்த் தெளிந்து வழியும்
தேசிய கல்வி பீடம்
அதிபர் ஆசான்கள் கூடி
அயராது அதனை நாடி
முறையான நெறிகள் வளர்க்க
முன்னோனே முறைகள் செய்வாய்.
(இணையேது ......)







